Wednesday, October 29, 2008

சுப்பராயலு ரெட்டியார்

திவான்பகதூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார்
முதல் உலகப்போரின்போது, பிரிட்டிஷ் படையில் இந்தியர்கள் பெருமளவில் சேர்ந்து, வீரப்போர் புரிந்தனர். இதனால் தேர்தல் நடத்தி, இந்தியர்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வெள்ளையர்கள் முடிவு செய்தனர்.

1919_ம் ஆண்டு நவம்பர் மாதம் 30_ந்தேதி, தமிழ்நாட்டுடன் ஆந்திராவும் இணைந்திருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் முதலாவது தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் போட்டியிடவில்லை. நீதிக்கட்சி (ஜஸ்டிஸ் கட்சி) போட்டியிட்டது. காங்கிரசின் உள் பிரிவாக அன்னி பெசண்ட் அம்மை யார் தலைமையில் இயங்கிய "ஹோம் ரூல்" இயக்கம், நீதிக்கட்சியை எதிர்த்து நின்றது.

(நீதிக்கட்சி என்பது, முற்றிலும் பிராமணர் அல்லாதவர்களைக் கொண்ட அமைப்பாகும் "வெள்ளுடை வேந்தர்" என்று புகழ் பெற்ற சர்.பிட்டி தியாகராயர் இக்கட்சியை அமைத்தார்.)

1919_ல் நடந்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதல்_அமைச்சர் பொறுப்பை ஏற்கும்படி, வெள்ளுடை வேந்தரை அனைவரும் கேட்டுக்கொண்டும், அவர் மறுத்துவிட்டார். எனவே, திவான் பகதூர் சுப்பராயலு ரெட்டியார் முதல்_அமைச்சரானார்.

சில மாதங்களுக்குப்பின், சுப்பராயலு ரெட்டியார் மரணம் அடைந்தார். அவருக்கு பதிலாக, பனகல் அரசர் முதல்_அமைச்சரானார்.

No comments:

Post a Comment