Thursday, October 23, 2008

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

தமிழ்நாடு அரசு சின்னம்!
தமிழ்நாடு அரசின் சின்னமாக கோபுரச் சின்னம் இருக்கிறது. இது எப்படி வந்தது? இந்தியா சுதந்திரம் பெற்ற போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என்ற தனித்தனி மாநிலங்கள் இல்லை. இவற்றின் சில பகுதிகள் ஒன்று சேர்ந்து சென்னை மாகாணமாக இருந்தது. அப்போது மாகாண முதல்வராக இருந்தார் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். இவர் அரசு நிர்வாக நோக்கத்திற்காக சென்னை மாகாணத்திற்கு என்று தனியாக ஒரு சின்னம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
கோபுரம் சின்னத்தைத் தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பினார். பிரதமர் நேரு மத்திய அமைச்சரவையுடன் ஆலோசித்தார். அவர்கள், மதச் சார்பற்ற நம்நாடு ஒரு மதச் சின்னத்தை, “இலச்சினை’யாக அனுமதிக்கக் கூடாது என்றனர். நேருவும் அனுமதி மறுத்து விட்டார்.
உடனே நேருவுக்கு கடிதம் எழுதி, “கோபுரம் மதச் சின்னமல்ல; தமிழக கட்டடக் கலைக்கு உரிய சிறப்பு கோபுரத்திற்கே உண்டு. மகாத்மாவின் நண்பரும் கிறிஸ்தவ பாதிரியாருமான ஆண்ட்ரூஸ், தமிழ்நாட்டில் திருப்பத்தூரில் கட்டிய மாதாகோவில் கூட இந்துமத கோபுர வடிவில் தான் அமைக்கப்பட்டது!’http://tambaramsivaraman என்று விளக்கினார் ஓமந்தூரார். அதன் பிறகு நேருவும் அனுமதி கொடுத்தார்.
மதுரையிலிருந்து 74 கி.மீ. தூரத்திலும், விருதுநகரிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர்.
தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம். இந்தக் கோபுரத்தை தமிழக அரசின் சின்னமாக ஏற்பது என்று அன்றைய சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. ‘மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த கோயில் கோபுரத்தை அரசு சின்னமாக அறிவிக்கக் கூடாது!’ என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அப்போதைய பிரதமர் நேருஜி இது குறித்து ஓமந்தூராரி டம் விளக்கம் கேட்டார். ‘இந்தக் கோபுரத்தை சமயச் சின்னமாகப் பார்க்காமல், திராவிடக் கட்டடக் கலையின் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்!’ என்று விளக்கம் அளித்தார் ஓமந்தூரார். இதன் பின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது.

No comments:

Post a Comment